ADDED : மார் 16, 2026 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் மற்றும் ஓவியப் பள்ளி சார்பில் 54வது ஆண்டு விழா நேற்று புதுச்சேரி ஓவியப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் ராஜன் தலைமை தாங்கினார். ஓவியர் செல்வம் எமில் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சங்கரதேவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது ஓடும் ரயில் ஓவியப் போட்டியில் இரண்டாம் கட்டமாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டாக்டர் சங்கரதேவி சேவையை பாராட்டி மருத்துவச் செம்மல் என்ற விருதினை ஓவியர் மன்றம் சார்பாக ராஜன் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராமலிங்கம், வரதராஜன், கார்முகிலன், ஷர்மிலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

