/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சார பைக், 3 சக்கர வாகன பெற சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு

ADDED : டிச 16, 2025 04:16 AM
புதுச்சேரி: மின்சார பைக் மற்றும் மூன்று சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிப்போர், ஏற்கனவே பெற்று வைத்துள்ள சாதி மற்றும் வருமான சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் மின்சார மூன்று சக்கர வாகனம் வாங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கு, புதியதாக சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற தேவையில்லை.
எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள், ஏற்கனவே பெற்று வைத்துள்ள சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது சுய உறுதிமொழியுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேர்வான விண்ணப்பதாரர்கள் புதிதாக சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பித்தால் போதுமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.