/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் குழந்தை பெற்ற குடும்பத்திற்கு ஊக்கத் தொகை உயர்வுக்கு அரசாணை
/
பெண் குழந்தை பெற்ற குடும்பத்திற்கு ஊக்கத் தொகை உயர்வுக்கு அரசாணை
பெண் குழந்தை பெற்ற குடும்பத்திற்கு ஊக்கத் தொகை உயர்வுக்கு அரசாணை
பெண் குழந்தை பெற்ற குடும்பத்திற்கு ஊக்கத் தொகை உயர்வுக்கு அரசாணை
ADDED : டிச 16, 2025 04:16 AM
புதுச்சேரி: பெண் குழந்தை பெற்ற குடும்பங்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை முறையே 30,000 ரூபாய், 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத் தொகை முறையே 50 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீஜெயக்குமார் ஆகியோர் அளித்த வாக்குறுதியின்படி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட நிதியுதவி அளிப்பதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டிற்கு 60 லட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம் 600 பெண் குழந்தைகளை பெற்ற 300 குடும்பங்கள் பயனடையும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

