/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டு மலர் தொகுப்பு அரசு பள்ளியில் வெளியீடு
/
ஆண்டு மலர் தொகுப்பு அரசு பள்ளியில் வெளியீடு
ADDED : ஆக 22, 2025 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : எல்லைப்பிள்ளைசாவடி, அரசு தொடக்கப் பள்ளியில், கல்வி செயல்பாடுகள், ஆசிரியர், மாணவர்களின் படைப்புகளின் ஆண்டுமலர் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் செல்வி தலைமை தாங்கினார். விழாவில், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் பாரதி, பேராசிரியர் பூங்குழலி, பட்டிமன்ற பேச்சாளர் அமலோற்பவ மேரி ஆகியோர் கலந்து கொண்டு ஆண்டு மலரை வெளியிட்டனர்.
தொடர்ந்து, பள்ளியின் ஆண்டு மலர் தொகுப்பை தயார் செய்த ஆசிரியர் ஆர்த்தி கவுரவிக்கப்பட்டார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.