/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
/
கோத்தாரி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 04, 2024 05:59 AM

புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார் பாளையம் கோத்தாரி வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி தாளாளர் ராதிகா கோத்தாரி, நிர்வாக உறுப்பினர் ரம்யா, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், மாணவர்களின் ஓவிய நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து, பங்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும், 2024 -25ம் ஆண்டில், இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படுவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

