/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக் ஷன ஸமிதி மக்களின் வருடாந்திர பொதுக்கூட்டம்
/
தர்ம சம்ரக் ஷன ஸமிதி மக்களின் வருடாந்திர பொதுக்கூட்டம்
தர்ம சம்ரக் ஷன ஸமிதி மக்களின் வருடாந்திர பொதுக்கூட்டம்
தர்ம சம்ரக் ஷன ஸமிதி மக்களின் வருடாந்திர பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 09, 2025 04:54 AM

புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷன ஸமிதி மக்களின் வருடாந்திர பொதுக்கூட்டம் இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ரோடு சங்கரவித்யாலயா, இ.சி.ஆர்., சங்கரவித்யாலயா, விவேகனாந்தா வித்யாலயா, வாசவி உயர் நிலை பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிகளுக்கு சிறந்த இடத்தை வாங்கிக் கொடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பொருள்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த வருடாந்திர பொதுக்கூட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பொது பேரவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டறிக்கையில் சமிதி வருடம் முழுதும் தொடர்ந்து செய்து வரும் 20 முக்கிய திட்டங்களை விளக்கி எவ்வாறு பொதுமக்கள் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை அளித்து திட்டங்களை வெற்றி அடைய வைத்துள்ளனர் என்பதை விளக்கினர்.
வருடாந்திர கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலை கமிட்டி உறுப்பினர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மேலும் ஸமிதியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.