தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு போட்டி

 மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு போட்டி

 மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு போட்டி


ADDED : ஜூலை 12, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் விளையாட்டு குழு மற்றும் மாணவர் பேரவை சார்பில் 'கேலக்ஸி-26' ஆண்டு விளையாட்டுப் போட்டி நடந்தது.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், கல்வி நிறுவன பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர்.

போட்டிகள் அனைத்தும் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு உணர்வுடன் நடந்தது. இதில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா,விளையாட்டுக் குழுத்தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விளையாட்டுக் குழு, மாணவர் பேரவை, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us