/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
/
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 24, 2025 07:21 AM

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் சமீப காலமாகமருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
கவர்னர் மாளிகைக்கு கடந்த 14ம் தேதி இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் புரளி என்பது தெரியவந்தது. 19ம் தேதி முதல்வர் ரங்கசாமி வீடு, அலுவலகம் மற்றும் பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, கவர்னர் மாளிகைக்கு இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காலை 11:15 மணிக்கு எஸ்.பி., ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சென்று கவர்னர் மாளிகை முழுவதும் சோதனையிட்டனர். பகல் 12:45 மணி வரை நடந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தகவல் புரளி என தெரிய வந்தது.
இந்த சோதனையின் போது கவர்னர், அவரது குடும்பத்தினர் மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் அனைவரும், தற்காலிகமாக கவர்னர் மாளிகை மாற்றப்பட உள்ள கடற்கரை சாலை கலாசார மையத்தில் நடந்த பூஜையில் இருந்தனர்.
பூஜை முடிந்து பகல் 12:45 மணிக்கு கவர்னர் உள்ளிட்ட அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.