/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் மேலும் ஒரு மோசடி அம்பலம்
/
'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் மேலும் ஒரு மோசடி அம்பலம்
'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் மேலும் ஒரு மோசடி அம்பலம்
'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் மேலும் ஒரு மோசடி அம்பலம்
ADDED : ஏப் 25, 2025 04:49 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மெகா மோசடி செய்த கோ பிரி சைக்கிள் நிறுவனம் வேறு பெயரில் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் பல லட்சம் மோசடி செய்தது சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து, துவங்கப்பட்ட 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார், கடந்த 3ம் தேதி, சாரம் காமராஜர் சாலையில் உள்ள 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தை அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.45 கோடியை பறிமுதல் செய்து, நிறுவனத்திற்கு 'சீல்' வைத்தனர். அமலாக்க துறையினர் சோதனை நடத்தி, இந்நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கினர்.மேலும், இந்நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த நிஷாத் அகமத் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் தகவலை தொடர்ந்து அவருக்கு அமலாக்க துறை மூலம் 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் தொடர் விசாரணையில், 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் உரிமையாளரான நிஷாத் அகமது, கடந்த 2018 முதல் 2019 வரை கர்நாடகா மற்றும் கேரளாவில் 'லிங்க் லைன்' என்ற நிறுவனத்தை துவங்கி ரூ.12,500 கட்ட, தங்கள் கனவு பைக்கை ஓட்டிச் செல்லுங்கள் என விளம்பரப்படுத்தி 600க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

