/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
/
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 31, 2025 02:11 AM

புதுச்சேரி:  கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா நிகழ்ச்சி நடந்தது.
மத்திய தலைமை விழிப்புணர்வு ஆணைய  அறிவுரையின் பேரில், புதுச்சேரியில் கடந்த 27ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதனையொட்டி நேற்று, கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில், போலீஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.எஸ்.பி., இஷா சிங், அறிவுறுத்தலின்படி, எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராய பாபு தலைமையில் நடந்த இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில், பல்வேறு பிரிவு எஸ்.பி.,க்கள் ரச்னா சிங், செல்வம், ரங்கநாதன், ரகுநாயகம், பக்தவச்சலம், சுப்ரமணி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பில், பொது மற்றும் அரசு ஊழியர்களிடையே வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து அனைவரும், லஞ்ச ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்றனர்.