/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆலோசனைக் கூட்டம்
/
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 14, 2024 06:05 AM
புதுச்சேரி L புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஜெயராம் ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., மாறன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் நியூட்டன், சப் இன்ஸ்பெக்டர்கள் அகல்யா, பஞ்சநாதன் முன்னிலை வகித்தனர். இதில், புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 80க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.பி., மாறன் கூறுகையில், பெட் ரோல் பங்க் உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு தராமான பெட்ரோல் வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் பாதுகாப்பு நலன்கருதி, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனைக்கு உண்டான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரசீது, பில் சரியான முறையில் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் கடத்தல் மற்றும் கடத்துபவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், விற்பனை செய்த பணத்தை வங்கியில் செலுத்த செல்லும்போது, தேர்தல் துறை பறக்கும் படை பறிமுதல் செய்யும் பணத்தை உடனே விசாரித்து ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

