ADDED : அக் 28, 2026 05:17 PM
புதுச்சேரி: சாலையோர கடைகள் உள்ளிட்ட இடங்களில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு சீனியர் எஸ்.பி., தீபிகா உத்தரவின் பேரில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் உருளையன்பேட்டை போலீசார் இணைந்து, நேற்று (அக்.,27) இரவு சாலையோரக் கடைகள், உணவகங்கள், லாரி மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடைகளில் ஏதேனும் போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.
போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் அல்லது போதைப்பொருள் கேட்டு வரும் நபர்கள் குறித்து தகவல் தெரியவரும் பட்சத்தில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆய்வின் போது, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கார்த்திகேயன், ஆகியோர் தங்களது குழுவினருடன், ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்துரையாடி, சிறிய அளவில் கூட போதைப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய, சட்ட ரீதியான விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
