/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை எதிர்ப்பு பிரசாரம்: வரும் 23ம் தேதி துவக்கம்
/
புகையிலை எதிர்ப்பு பிரசாரம்: வரும் 23ம் தேதி துவக்கம்
புகையிலை எதிர்ப்பு பிரசாரம்: வரும் 23ம் தேதி துவக்கம்
புகையிலை எதிர்ப்பு பிரசாரம்: வரும் 23ம் தேதி துவக்கம்
ADDED : செப் 19, 2024 02:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் 2 மாதங்கள் புகையிலை இல்லா பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதுச்சேரியில், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 2 மாதம் புகையிலை இல்லா இளைஞர் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் சோமசேகர், புகையிலை கட்டுப்பாட்டு மாநில அதிகாரி வெங்கடேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 23ம் தேதி முதல் 2 மாதம் மேற்கொள்ள உள்ள புகையிலை எதிர்ப்பு பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், பிரசாரத்தின் முக்கிய பங்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊர்வலம், சுவர் விளம்பரம், நட்சத்திர பிரபலங்களின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் குறும்படங்கள் திரையிட ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.