/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 20, 2025 06:20 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கனுார் போலீஸ்சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் மோகனாம்பாள் முன்னிலை வகித்தார். திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகமால் இருக்க, தங்களுக்குள் இருக்கும் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், எவ்வாறு படித்தால், வாழ்க்கையில் முன்னேற முடியும் உள்ளிட்டவை குறித்துபல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டப்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள்,திருக்கனுார் போலீசார் பங்கேற்றனர்.