தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ பழுது: மக்கள் அவதி

அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ பழுது: மக்கள் அவதி

அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ பழுது: மக்கள் அவதி


UPDATED : அக் 27, 2026 08:26 PM

ADDED : அக் 27, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:26 PM ADDED : அக் 27, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குமரகுருபள்ளத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வழங்கப்பட்டு 10 மாதங்களில் மழைநீர் கசிவு, லிப்ட் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குமரகுரு பள்ளத்தில் 12 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 216 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

வீடு வழங்கி 10 மாதங்களே ஆன நிலையில், சமீபத்தில் பெய்த கன மழையில் அடுக்குமாடி குடியிருப்பு மேல் தளங்களில் நீர் கசிவு ஏற்பட்டு வீட்டு சுவர்களில் ஈரம் தடம் ஏற்பட்டு உள்ளது.

இது மட்டுமின்றி மழை நீர் ஒழுகி மின்சார இணைப்புகளில் புகுந்ததால் 2 லிப்ட்கள் பழுதாகி 10 நாட்களுக்கு மேலாக சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதனால், மாடிக்கு செல்லும் முதியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், குடிநீர் பயன்பாட்டிற்காக கீழே உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து மேலே உள்ள தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்ல பொருத்தப்பட்டிருந்த 6 மின் மோட்டார்களில் 3 பழுதாகி பயன்படாத முடியாத நிலையில் உள்ளது.

இதுதொடர்பாக, முதல்வர் ரங்கசாமியிடம், அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் புகார் மனு அளித்து, இப்பிரச்னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us