அப்போலோ இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரி வருகை
அப்போலோ இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரி வருகை
ADDED : ஜூன் 18, 2026 07:45 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, இரைப்பை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் நாளை (19ம் தேதி) புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், சென்னை அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம் மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான், இரைப்பை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன், நாளை (19ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
அதில், இரைப்பை குடல் புற்றுநோய், அறுவை சிகிச்சை, மலக்குடல், ஆசனவாய், கல்லீரல், பித்தப்பை, கணையம், இவைகளில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இரைப்பை புண், குடல் எரிச்சல், வயிற்று போக்கு, வயிற்றுவலி, விழுங்குவதில் சிரமம் இதுபோன்ற அனைத்து வகையான புற்றுநோய் சார்ந்த, நோய்களுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், 9943099523, 7200034137 இந்த மொபைல் எண்களை தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்யவும்.
