அப்போலோ இரைப்பை குடலியல் சிறப்பு நிபுணர் 12ல் புதுச்சேரி வருகை
அப்போலோ இரைப்பை குடலியல் சிறப்பு நிபுணர் 12ல் புதுச்சேரி வருகை
ADDED : செப் 09, 2026 07:03 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் இரைப்பை குடலியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் வரும் 12ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடலியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் கலையரசன் ராஜா, வரும் 12ம் தேதி சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், உணவுக் குழாய் தொடர்பான பிரச்னைகள், விழுங்குவதில் சிரமம், கல்லீரல் கட்டிகள், பித்தநாள கட்டிகள், மஞ்சள் காமாலை, பித்தநாள கற்கள், பித்தநாள காயம், இன்ட்ராஹெபாட்டிக், கணைய நோய்கள், கணைய புற்றுநோய், கணைய அழற்சி, நியூரோஎன்டோக்ரைன் கட்டிகள், மண்ணீரலில் பிரச்னைகள், குடலியல் புற்றுநோய்கள், பெருங்குடல் மற்றும் சிறுகுடல் நோய்கள், மூலநோய், புண்கள் தொடர்பான பரிசோதனைக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர் கலையரசன் ராஜாவை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
