தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழக அமைச்சர் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சர் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சர் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு


ADDED : செப் 09, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீது,  கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அவரது சகோதரர் மரிய குளோத், 45; அவரது மனைவி கெரோலின் 42; ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் குற்றப்பத்திரிகை பெற நேரில் ஆஜராக மரியவில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராகமால் தவிர்த்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில், கட்டாயம் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியது. தொடர்ந்து கடந்த 31ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது மரிய வில்சன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நீதிபதி சந்திரசேகரன் முன்பாக அவர் ஆஜரானார். விசாரித்த நீதிபதி வழக்கை நேற்று (9ம் தேதி) ஒத்தி வைத்தார். மேலும், மரியவில்சன் தரப்பில், புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்ககோரியும் தனித்தனியாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், அமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு மீண்டும் நாளை (11ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us