அப்போலோ நுரையீரல் நிபுணர் புதுச்சேரியில் 24ம் தேதி ஆலோசனை
அப்போலோ நுரையீரல் நிபுணர் புதுச்சேரியில் 24ம் தேதி ஆலோசனை
ADDED : அக் 21, 2026 07:49 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல் புற்றுநோய் சிறப்பு நிபுணர் காதர் உசைன் நாளை மறுநாள் (24ம் தேதி) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண்.22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம் மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல் புற்றுநோய் சிறப்பு நிபுணர் காதர் உசைன் நாளை மறுநாள் (24ம் தேதி) காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
இதில், உணவுக்குழாய் புற்றுநோய், காற்று குழாய் புற்றுநோய், தைமோமா, மார்பில் மற்ற கட்டிகள், மார்பு சுவர் கட்டிகள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் மெட்டாஸ் டாஸிஸ், நுரையீரல் மெட்டாஸ்டாசி கண்டறிதல்,கோவிட் நுரையீரல், நாள் பட்ட புகைப்பிடிப்பவர்கள், நுரையீரல் சுழற்சி மற்றும் தொற்று, புளூரல் புற்றுநோய்கள். உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், 9943099523,7200034137 மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.
