தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


ADDED : அக் 21, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது.

கலெக்டர் குலோதுங்கன் தலைமை தாங்கினார். யு.ஐ.டி.ஏ.ஐ., மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 5 முதல் 15 வயது வரை உள்ளவர்கான ஆதார் பதிவின் போது, தற்போதைய நிலை மற்றும் அவர்களது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல், ஆதார் சேவைகளின் விரிவாக்கம், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவை அதிகரித்தல், ஆதார் சேவை மையங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த தகவல்களை யு.ஐ.டி.ஏ.ஐ., உடன் ஒருங்கிணைத்தல், ஆதார் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் கலெக்டர் குலோதுங்கன், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை துரிதப்படுத்தி, பொதுமக்களுக்கு தடையற்ற சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us