தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/‘வெற்றி தோல்வி என்பது சகஜம் மரியாதையை விட்டு கொடுக்க கூடாது’: மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

‘வெற்றி தோல்வி என்பது சகஜம் மரியாதையை விட்டு கொடுக்க கூடாது’: மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

‘வெற்றி தோல்வி என்பது சகஜம் மரியாதையை விட்டு கொடுக்க கூடாது’: மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் கட்சியின் மரியாதையை விட்டு கொடுக்க கூடாது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி இளைஞர் காங்., தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், வைத்தியநாதன், பொதுச் செயலாளர்கள் இளையராஜா சங்கர், இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு, நடராஜன், அமைப்புசார தொழிலாளர் காங்., மாநில தலைவர் பிரபுராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், இளைஞர் காங்., பற்றி விழிப்புணர்வும், கட்சி அடிப்படை கொள்கைகள், எதிர்கால பணிகள், இளைஞர் காங்., தேர்தல் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்; ஆனால் கட்சியின் மரியாதையை நாம் விட்டு கொடுக்க கூடாது. மக்கள் பணியில் கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்., எதிர்த்து நடக்கும் போராட்டத்தால் பா.ஜ., ஆட்டம் கண்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர்., கொண்டு வந்து அதில் தில்லுமுல்லு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, எதிர்க் கட்சிகளை வீழ்த்தியுள்ளனர்.

வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால், பிரதமர் மோடியால் 10 சீட் கூட ஜெயிக்க முடியாது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us