தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொற்று நோய்களிலிருந்து மக்களை காக்க துறை ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்: அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

தொற்று நோய்களிலிருந்து மக்களை காக்க துறை ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்: அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்

தொற்று நோய்களிலிருந்து மக்களை காக்க துறை ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்: அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரு மழையை எதிர்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்துள்ள மனு:

காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு வாரத்திற்கு பெருமழையும் காற்றும் வீசக்கூடும். மழை நிவாரண பணிகளும், மழை முடிந்த பிறகு மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம் தேவை.

உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், சுகாதாரம், மின்சாரம், வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நிவாரண பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக் காய்ச்சல், வயிற்றுக்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர காண்காணிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

நோய் தொற்றை தடுக்க சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். பெரு மழையை எதிர்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உத்தரவுகளை பிறப்பித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும்.

கலெக்டர் தலைமையில், முக்கியத் துறைகளின் செயலாளர்களை கொண்ட சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும். நிவாரண பணிகளை தலைமை ஏற்று நடத்திடவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மன உறுதியும், ஆதரவும் வழங்க அமைச்சர்கள் நேரில் முகாமிட்டு பணி செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us