அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கல்
அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கல்
ADDED : ஆக 29, 2026 07:52 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் எலும்பியல் சிறப்பு நிபுணர் பாலச்சந்திரன், புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் நேற்று ஆலோசனை வழங்கினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல் சிறப்பு நிபுணரான பாலச்சந்திரன், புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், நேற்று மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
அதில், முழங்கால் மற்றும் தோள் வலி, சிக்கலான காயங்கள், முதுமையினால் ஏற்படும் மூட்டு அழற்சி, மூட்டு சீரமைப்பு, குழந்தை மருத்துவ எலும்பியல், மூட்டுகளில் விறைப்பு, முழங்கால், இடுப்பு, தோள் மற்றும் முழங்கை முழுமையாக மாற்றி பொருத்துதல், முதகெலும்பியல் ஊனம், முதுகெலும்பு பக்க வளைவு, முதுகெலும்பு முன்பக்க சாய்வு, முதுகு மற்றும் கழுத்து வலி சம்பந்தமாக தகுந்த சிகிச்சை மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.
