தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாகி செவிலியர் கல்லுாரிக்கு கட்டடம்  அசோக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

மாகி செவிலியர் கல்லுாரிக்கு கட்டடம்  அசோக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

மாகி செவிலியர் கல்லுாரிக்கு கட்டடம்  அசோக்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : ஆக 29, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீது மாகி எம்.எல்.ஏ., அசோக்குமார் பேசியதாவது:

கடந்த ஆண்டு மாகேவில் செவிலியர் கல்லுாரி ஒதுக்கப்பட்டுக் தொடங்கப்பட்டது. ஆனால், கல்லுாரி தொடங்கப்பட்ட பிறகு அதற்கு எவ்வித கூடுதல் உதவிகளும் வழங்கப்படவில்லை. தற்போது தகுந்த ஆசிரியர்கள், ஆய்வகக் கருவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் செவிலியர் கல்லுாரியை அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. கல்லுாரிக்குச் சொந்த கட்டடம், விடுதி வசதிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ராஜிவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் பணி இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இக்கல்லுாரி 40 ஆண்டுகள் பழமையான ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. போதிய வசதிகள் இல்லாததால், நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை அளிப்பதிலும் தரமான பராமரிப்பு வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கல்வித் தரம் சிறப்பாக இருந்தபோதிலும், புதிய விடுதி மற்றும் கல்லுாரி கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us