தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை


UPDATED : ஆக 23, 2026 07:47 PM

ADDED : ஆக 23, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 07:47 PM ADDED : ஆக 23, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல் புற்றுநோய் சிறப்பு நிபுணர் காதர் உசைன் (25ம் தேதி) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம் மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் நுரையீரல் புற்றுநோய் சிறப்பு நிபுணர் காதர் உசைன் நாளை (25ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

இதில், நுரையீரல் புற்றுநோய், உடலின் பிற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு பரவிய புற்றுநோய் மற்றும் நுரையீரல் முடிச்சுகள், உணவுகுழாய் மற்றும் செரிமான மண்டல புற்றுநோய்கள், மார்பு சுவர் கட்டிகள் மற்றும் காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை, முன்னேறிய மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை, சுவாசப் பாதையில் கட்டிகள், மார்பின் மையப் பகுதியில் ஏற்படும் கட்டிகள், நுரையீரல் உறை புற்றுநோய்கள், மார்பின் மையப்பகுதி நிணநீர் முடிச்சுக் கட்டிகள், மீண்டும், மீண்டும் நுரையீரல் உறையில் திரவம் சேரும் பிரச்னைக்கு சிகிச்சை, காசநோய்க்கு பிறகு ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் மற்றும் மூச்சுக்குழாய் - நுரையீரல் உறை இணைப்பு கோளாறுகள் உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், 9943099523,7200034137 மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us