தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை


UPDATED : ஆக 06, 2026 09:42 PM

ADDED : ஆக 06, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 09:42 PM ADDED : ஆக 06, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் இருந்து இரப்பை அறுவை சிகிச்சை நிபுணர் சுதீப்தா குமார் ஸ்வைன் (8ம் தேதி) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம் மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் இருந்து இரப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வைன் (8ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

அதில், உணவு குழாய், கல்லீரல், கணையம் பிரச்னை, இரப்பை, பெருங்குடல், மலக்குடல், குடல்வளரி, ஆசனவாய், மஞ்சள் காமாலை, குடல் இரக்கம், பித்தப்பை கற்கல், வயிற்று புண், மூலம் பிரச்னை, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் அசெளகரியம் விழுங்குவதில் சிரமம், மஞ்சள் தோல் மற்றும் கண்கள், வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஆகிய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், 9943099523, 7200034137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us