தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கம்யூ., நடைப்பயண இயக்கம்

இந்திய கம்யூ., நடைப்பயண இயக்கம்

இந்திய கம்யூ., நடைப்பயண இயக்கம்


ADDED : ஆக 06, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இந்திய கம்யூ., சார்பில் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு நடைப்பயண இயக்கம் நேற்று நடந்தது.

சாரம் ஜீவா சிலை அருகே துவங்கிய நடைப்பயண இயக்கத்திற்கு, தொகுதி செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம் நடைப்பயண இயக்கத்தை துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவக்குமார்,  துணை செயலாளர் தயாளன், பொருளாளர் மாதவராமன், நிர்வாகிகள் சரவணன், ஞானசங்கர், மோகன்தாஸ், பிரகாஷ், வேலன், ராஜாம்பாள், வனமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நடைப்பயண இயக்கத்தில் காமராஜ் நகர் தொகுதியில் மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்கால்களையும் துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்திட வேண்டும். லெனின் நகர், சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு, அனைத்து வீடுகளுக்கும் வழங்கிட வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us