அப்போலோ புரோட்டான் சிறுநீரக சிறப்பு மருத்துவர் புதுச்சேரிக்கு நாளை வருகை
அப்போலோ புரோட்டான் சிறுநீரக சிறப்பு மருத்துவர் புதுச்சேரிக்கு நாளை வருகை
ADDED : செப் 26, 2026 05:50 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் இருந்து சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், நாளை (28ம் தேதி) புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண் 22, 14வது குறுக்கு தெருவில், சென்னை அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இங்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, சிறுநீரக மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன் நாளை (28ம் தேதி) 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, ஆலோசனை வழங்குகிறார்.
அதில், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில், தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்யவும்.
