தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது


ADDED : செப் 26, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., ரோட்டில், 2 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று கத்தியுடன் நின்றவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர்கள், சண்முகாபுரத்தை சேர்ந்த சபரிநாதன்,28; மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வசந்த், 27; என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

அதே போல, உழவர்கரை பகுதியில் கத்தியுடன் நின்ற, ரெட்டியார்பாளைம் பகுதியை சேர்ந்த ஜெய்குமார், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us