/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாட்கோ மூலம் சிவில் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பாட்கோ மூலம் சிவில் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
பாட்கோ மூலம் சிவில் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
பாட்கோ மூலம் சிவில் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 29, 2025 01:19 AM
புதுச்சேரி: பாட்கோ மூலம் அளிக்கப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, https://www.py.gov.in என்ற இணையதளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களுடன் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் 3வது தளத்தில் உள்ள பாட்கோவில் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலைக் கழகம்) சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 2ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பின், விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.