தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

 காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

 காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 13, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் உள்ள 16 முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தி ல், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் மொத்தம் 16 முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 690 இடங்களுக்கு வரும் ஜூலை 10ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் தலா -50 இடங்களும், பிரெஞ்சு-30; வரலாறு-40; எம்.எஸ்சி., கணிதம்-50; இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்.எஸ்சி., கணினி அறிவியல்- 60; புள்ளியியல் -20, மனையியல் படிப்பிற்கு 30 இடங்கள் உள்ளன. வணிகவியல் மற்றும் மேலாண்மை பிரிவில் எம்.காம்., பொது படிப்பிற்கு 60 இடங்களும், எம்.காம். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பிற்கு 60 இடங்கள், எம்.டி.டி.எம்., (மாஸ்டர் ஆப் டூரிசம், டிராவல் மேனேஜ்மென்ட்) என்ற படிப்புக்கு 30 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மனையியல் மற்றும் எம்.காம்., கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இளங்கலை படிப்பின் அனைத்துப் பருவங்களிலும் முதன்மை படம் மற்றும் துணைப் பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மாணவர்கள் இணையதளத்தில் https://kmcpgs.edu.in இருந்து விண்ணப்பப் படிவம், மற்றும் வங்கிச் செலான் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநர், காஞ்சி மாமுனிவர் நிறுவனம், லாஸ்பேட்டை, புதுச்சேரி- 605008 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ஒன் றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் புதுச்சேரியின் எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். இதர பிரிவினர், புதுச்சேரி அல்லாத மாணவர்களுக்கு 600 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us