/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 18, 2025 03:57 AM
புதுச்சேரி: இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் புதுச்சேரி கிளையில் வங்கித் தொடர்பாளராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க், புதுச்சேரி கிளை அலுவலக செய்திக்குறிப்பு:
இந்த பணிக்கு, ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காய்கறி, மளிகை மற்றும் மருத்துவ கடைகள், சிறிய சேமிப்பு திட்ட முகவர்கள், பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள், பொது சேவை மையங்களை இயக்கும் நபர்கள், கணினி சேவை மையங்கள் நடத்துபவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகிய நபர்கள் விண்ணபிக்கலாம்.
இப்பணிக்கு, வயது வரம்பு 19 முதல் 75 வரை இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் அண்டு பைனான்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இந்த பணிக்கு தகுதி பெறுபவர்கள் கணக்கு தொடக்கம், பணம் வைப்பு மற்றும் பணம் எடுப்பு, விபத்து, மருத்துவ காப்பீடு லைப் இன்சூரன்ஸ் உடன் சேமிப்பு திட்டங்களுக்கு ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், டீம் திட்டங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், பரிவர்த்தனைகள், பண பரிமாற்றம், மின்சாரம், தொலைபேசி மற்றும் அனைத்து விதமான பில்கள் செலுத்துதல், வங்கி விழிப்புணர்வு முகாம்கள், கடன் தனிநபர், வீடு, சொத்து, வணிகம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர்.
விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்கள் அறிய புதுச்சேரி ரங்கப்பிள்ளை தெரு, தலைமை அஞ்சல் நிலையம், இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை அனுகவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.