sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஆக 13, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 05:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி, குயவர்பாளையம் லெனின் வீதி (மணிமேகலை பள்ளி எதிரில்) இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, கரம் மாசாலா பொடிகள் உள்ளிட்ட மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியில் சேர 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நுாறு சதவீதம் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 நாட்கள் முழுநேர பயிற்சி, 90 சதவீத செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சி காலங்களில், உணவுகள் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வரும் 18ம் தேதி கடைசி நாளாகும். வரும் 21ம் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோஎடுத்து வரவும். மேலும் 88704 97520, 0413 - 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us