sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

/

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : செப் 05, 2025 03:03 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராணுவ கல்லுாரியில் சேர புதுச்சேரி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி செய்திக்குறிப்பு:

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய இராணுவ கல்லுாரியில் 01.07.2026ல் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 1.07.2026 அன்று பதினோன்றை வயதுக்கு குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும். 02.07.2013க்கு முன்னரும் 01.01. 2015க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது.

இக்கல்லூரியில் (1.07.2026-ல்) சேரும்பொழுது ஏழாம் வகுப்பு பயிலுபவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவரா கவோ இருத்தல் வேண்டும்.

மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்யும் முறை 7.12.2025 அன்று காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை கணித தேர்வும், பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை பொது அறிவு தேர்வும், பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை ஆங்கிலத் தேர்வும் நடைபெறும்.

கணிதம், பொது அறிவு தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதாலம். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மருத்துவ பரிசோதனை சேர்க்கையின் ஓர் அங்கமே தவிர சேர்க்கையின் இறுதி கட்டம் அல்ல என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்வு மையம் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ, மாணவி களுக்கு 7.12.2025ம் தேதி எழுத்து தேர்வுகள் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வித்துறை வளாகத்தில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்ப படிவம் வரைவோலை (Demand Draft) மூலம் பெறுவதற்கு தெளிவான அஞ்சல் எண் உள்ள தங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், THE COMMANDANT RIMC FUND, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN, (BANK CODE-1399), UTTARAKHAND கிளையில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர் ரூ.600, அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555 தொகைக்கு வரை வோலையாக எடுத்து, THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT,DEHRADUN, UTTARAKHAND-248003 என பூர்த்தி செய்து 15.10.2025 தேதிக்குள் இணை இயக்குனர் அலுவலகம், இரண்டாம் தளம், கல்வித்துறை வளாகம், அண்ணா நகர் புதுச்சேரி-௬௦௫ ௦௦௫ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us