/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 09, 2025 12:16 AM
புதுச்சேரி: இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், முதல்வர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2025-26ம் ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.இஐ.இ.டி) சேர்க்கைக்கு புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேர, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிக்க வேண்டும்.
மேலும், சேர்க்கைக்கான அதிக பட்ச வயது 29 இருக்க வேண்டும். அட்டவணை இனத்தவர்களுக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், இன்று 9ம் தேதி முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வந்து சேரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

