/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இசை, விளையாட்டு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
இசை, விளையாட்டு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 27, 2025 05:33 AM
புதுச்சேரி: பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில், குழந்தைகளுக்கான இசை மற்றும் விளையாட்டிற்கு சிறப்பு பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்படுகிறது.
பள்ளிக் கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜவகர் குழந்தைகள் இல்லம் சார்பில், குழந்தைகளுக்கான இசை மற்றும் விளையாட்டில் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. 6 முதல் வயது வரை உள்ள மாணவர்கள் சேரலாம்.
அதில், பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் விளையாட்டுகளான, கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் ஆகியவற்றை கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள், வரும் 29ம் தேதி முதல், புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லம், கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாகூர் அரசு நடுநிலைப்பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது.
அதே இடத்தில், சிறப்பு பயிற்சி, அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலை 9:00 முதல் 12:00 மணி வரை அளிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கான சான்றிதழ், அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகிய நகல்களை சமர்ப்பிக்கவும். மேலும், 0413 2225751, 9443435129 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.