sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

/

வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : செப் 29, 2025 03:01 AM

Google News

ADDED : செப் 29, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நலச்சங்க தலைமை செயல் அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வேளாண் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வேளாண் துறையின் கீழ் செயல்படும் புதுச்சேரி வேளாண் தொழிலாளர் நலச்சங்கம் செயல்படுத்தி வருகிறது.

வேளாண்துறையின் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, வேளாண் தொழிலாளர்கள், நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து இருத்தல் அவசியமாகும்.

மேலும், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதி வாய்ந்த வேளாண் தொழிலாளர்கள் தங்களை நலச்சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன்படி, நிலமற்ற தனிநபராக வேளாண் பணி செய்பவர் அல்லது ஒரு ஏக்கருக்குள் நிலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 60க்குள் இருத்தல் வேண்டும்.

கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். அட்டவணை இன விவசாய தொழிலாளர்கள், சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், புதிதாக எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படம்- 1, அட்டவணை இனத்தவர் அதற்கான வருவாய்த்துறை சாதி மற்றும் வருமான சான்றிதழ், சான்றளிக்கும் விவசாயியின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களை தங்களது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்களும் இன்றி சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதி உழவர் உதவியகங்களில் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து வரும் அக்டோபர் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us