sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச சமய பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

 இலவச சமய பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

 இலவச சமய பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : பிப் 17, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 04:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள கோடைக்கால இலவச சமயப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கோடைக்காலத்தில், 10 நாள் இலவச சமயப் (சிந்தாந்த) பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 22ம் ஆண்டு பயிற்சி வகுப்பு வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சின்ன காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி மாளிகையில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நுால்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் 70 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட உரையை சதாசிவம், நிறுவனர், திருமுறை அருட்பணி அறக்கட்டளை, நெ.7, பங்காரம்மன் தோட்டம், காஞ்சிபுரம்,631 501, போன் 98406 38813 என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்., 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி, உணவு, உறைவிடம் இலவசம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர் நுழைவுக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us