தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... வரவேற்பு:10ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க அறிவிப்பு

எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... வரவேற்பு:10ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க அறிவிப்பு

எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்... வரவேற்பு:10ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க அறிவிப்பு


ADDED : ஜூலை 02, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 02:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2026--27-ம் கல்வியாண்டிற்கான எம்.டி.எஸ்., - முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சென்டாக் நிர்வாகம் வரவேற்றுள்ளது.

விண்ணப்ப பதிவு முதுநிலை பல் மருத்துவ இடங்களில், அரசு ஒதுக்கீடு, அகில இந்திய மேலாண்மை ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ இடங்களுக்கு மாணவர்கள் தனித்தனியே விண்ணப்பிக்கலாம். www.centacpuducherry.in என்ற ஆன்லைனில் வரும் 10ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் பெறப்படும்.

புதுச்சேரியை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 1,500. இதர பிரிவினர் ரூ.3,000 செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு ரூ.5,000; என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்ஸ்சர்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் ஆகும். விண்ணப்ப கட்டணம் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

நிபந்தனைகள் ஒரு விண்ணப்பதாரர் முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கு ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு, கலந்தாய்வு செயல்முறையிலிருந்து நீக்கப்படுவார். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே விண்ணப்பம் முழுமையடைந்ததாக கருதப்படும். கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

எவ்வளவு சீட்டுகள் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில், சென்டாக் அரசு ஒதுக்கீட்டிற்கு 9 சீட்டுகள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 என, மொத்தம் 19 சீட்டுகள் உள்ளன.

வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் 23 சீட்டுகள், மாகி பல் மருத்துவ கல்லுாரியில் சென்டாக் அரசு ஒதுக்கீட்டிற்கு 21 இடங்கள் உள்ளன. இந்த பல் மருத்துவ கல்லுாரிகளை பொருத்தவரை, சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் 53 சீட்டுகளும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 சீட்டுகள் என, மொத்தம் 63 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன.

இருப்பினும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் கூடுதல் எம்.டி.எஸ்., இடங்கள் இந்தாண்டு கிடைக்க உள்ளதால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ெஹல்ப் லைன் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், தங்களது லாகின் டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் மூலமாகவோ அல்லது 0413-2655570 அல்லது 2655571 என்ற ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொண்டோ விளக்கம் பெறலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us