/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.சி., பிரிட்ஜ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஏ.சி., பிரிட்ஜ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 24, 2024 12:13 AM
புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், ஏ.சி., பிரிட்ஜ் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி, லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுனத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏ.சி., பிரிட்ஸ் சர்வீஸ் மற்றும் ரிப்பேர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
8ம் வகுப்பு படித்துள்ள புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 30 நாட்கள் முழு நேர பயிற்சியில் உணவு வழங்கப்படுகிறது.
மேலும், செய்முறை பயிற்சி வழங்கப்பகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்கள் வரும் 27ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி துவங்கப்படுகிறது. மேலும், 0413 - 2246500, 8870497520 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.