/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொத்தபுரிநத்தம்கோவில் சிறப்பு அதிகாரி நியமனம்
/
கொத்தபுரிநத்தம்கோவில் சிறப்பு அதிகாரி நியமனம்
ADDED : மார் 08, 2026 04:11 AM

புதுச்சேரி: திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டி, திருபுவனை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
கோரிக்கையை ஏற்று, முதல்வர், பொதுப்பணித்துறை பாசனப் பிரிவில் பணியாற்றி வரும் முருகனை இக்கோவிலின் சிறப்பு அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். இதற்கான அரசாணை இந்து சமய நிறுவனங்கள் துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தின் போது, என்.ஆர்.காங்., முக்கிய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.

