தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் 

பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் 

பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் 


ADDED : மார் 08, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:புதுச்சேரி தந்தை பெரியார் நகர் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, டிஸ்லெக்சியா, ஆட்டிசம், ஏடிஎச்டி, கற்றலில் சிரமம் கொண்ட குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை, போக்குவரத்து வடக்கு சீனியர் எஸ்.பி., திவ்யா தேவந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தன்வந்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலயன், அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் வெங்கடராமன், மத்திய அரசின் தொழில் முறை மருத்துவர் சசிதர் ராவ் கலந்து கொண்டு ஊர்வலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் கூறுகையில், 'ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறன்களை கொண்டவர்கள். அவர்களுக்கு சம வாய்ப்பும், கல்வியும் வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். இந்த ஊர்வலம் மூலம் சமூகத்தில் பல்வேறு கற்றல் திறன் கொண்ட குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை உருவாக்கும் முயற்சியாக அமையும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us