ADDED : அக் 15, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ரேவதி வரவேற்றார்.
முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கோமளா, சாமுண்டீஸ்வரி, இரிசப்பன் வாழ்த்தி பேசினர்.
உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நோக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில், வட்டம் மூன்றின்சார்பில், நடந்த வலு துாக்கும் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த மாணவி நிஷாந்தி, மூன்றாம் இடம் பிடித்த மாணவர் சித்தார்த் மற்றும் புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நவராத்திரி விழா பரதநாட்டியத்தில் பங்கேற்ற மாணவி ஆதிஷா ஆகியோரை ஆசிரியர்கள் வனிதா, திவ்யா, குபேரன், அமலா, அருளரசி ஆகியோர் பாராட்டினர்.ஆசிரியர் சங்கரதேவி நன்றி கூறினார்.