/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு பாராட்டு விழா
/
கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு பாராட்டு விழா
ADDED : ஜன 21, 2025 06:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பு சார்பில் நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குனருக்கு பாராட்டு விழா தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது.
சுந்தரமுருகன் தலைமை தாங்கினார். நண்பர்கள் தோட்டம் அமைப்பு தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார். புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, வடக்குப் பகுதி போலீஸ் எஸ்.பி.,வீரவல்லபன் கலந்து கொண்டு, கலை பண்பாட்டுத்தறை இயக்குனர் கலியபெருமாளுக்கு பாராட்டு மடல் வழங்கினர்.
விழாவில், சுந்தரமுருகன் எழுதிய 'உடைத்திட்ட வில்லை மீண்டும் புதிதாய்ச் சமைத்திட்டவனே', புதுவை யுகபாரதி மொழி பெயர்த்த சாகித்திய அகாடமி விருது பெற்ற ஒடியா சிறுகதைத் தொகுப்பு நுால் 'ஓர் எல்லையற்ற நொடிப்பொழுது' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டது.
தமிழ்ச் சங்கத்தின் செயலர் சீனு மோகன்தாஸ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், உசேன், வெங்கடசுப்புராயன், சாகித்திய அகாடமி விருதாளர் கண்ணையன், தட்சிணாமூர்த்தி, சுப்ரபாரதி மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அரவிந்தர் சங்க கல்வி இலக்கிய செயலர் கிஷோர் குமார் திரிபாதி சிறப்புரை ஆற்றினார்.
புதுவை யுகபாரதி நன்றி கூறினார்.

