தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 13, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் திமான்ஷ் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராஜாராம், காத்தவராயன்,சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, கடந்த கல்வியாண்டில், சி.பி.எஸ்.இ., 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி கொடுத்தமைக்காக, பள்ளி துணை முதல்வர், ஆசிரியர்களை பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

மேலும், 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பொறுப்பாசிரியை கமலா தொகுப்புரையாற்றினார். ஆசிரியை வடிவுக்கரசி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us