/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' லட்சிய விருது ஆசிரியருக்கு பாராட்டு
/
'தினமலர்' லட்சிய விருது ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : ஜன 12, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்., சுப்ரமணியன் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மோகன்ராஜூக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த விழாவிற்கு, முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, புருஷோத்தமன் ஆகியோர் மோகன் ராஜூக்கு சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
சிறந்த ஆஷா பணியாளர் விருது பெற்ற முன்னாள் மாணவி ராஜேஸ்வரிக்கு, முன்னாள் தமிழ் ஆசிரியை அமுதா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

