ADDED : பிப் 12, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் எம்.எம்.ஜி., நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், கடந்த 10ம் தேதி அங்குள்ள ஒரு கிளினிக்கிற்கு சென்று விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, பணத்துடன் இருந்த தனது மணி பர்சை ஆட்டோவில் தவற விட்டார்.
ஆட்டோவில் கிடந்த மணி பர்சை, அதன் டிரைவர் ஞானபிரகாசம் வீதியை சேர்ந்த தேத்தரவுராஜ், எடுத்து பார்த்தபோது அதில் ரூ.10,850 பணம் இருந்தது.அவர், பணத்துடன், பர்சை, காரைக்கால் போலீசில் ஒப்படைத்தார்.ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை, சீனியர் எஸ்.பி., லட்சுமிசவுஜன்யா, எஸ்.பி.,பாலச்சந்தர் மற்றும் போலீசார் பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதன் பிறகு, மணி பர்சை தவறவிட்ட சரஸ்வதியிடம், போலீசார் பணத்துடன் அதனை ஒட்டடைந்தனர்.

