/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அயோத்தியில் அன்னதான சேவை தமிழக குழுவினருக்கு பாராட்டு
/
அயோத்தியில் அன்னதான சேவை தமிழக குழுவினருக்கு பாராட்டு
அயோத்தியில் அன்னதான சேவை தமிழக குழுவினருக்கு பாராட்டு
அயோத்தியில் அன்னதான சேவை தமிழக குழுவினருக்கு பாராட்டு
ADDED : பிப் 21, 2024 01:23 AM

புதுச்சேரி : அயோத்தியில் தொடர்ச்சியாக 33 நாட்கள் அன்னதானம் வழங்கி சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னை கார்த்திக் டிபன் சென்டர், அயோத்தி ஆர்ய வைசிய சாரிட்டபிள் பவுண்டேஷன், எஸ்.வி.ஏ.சி., பவுண்டேஷன் சார்பில், அன்னதானம் வழங்கும் பணி, கடந்த மாதம் 19ம் தேதி, அயோத்தி ராமர் கோவில் அருகில் துவங்கியது.
இதற்காக, தமிழகத்தில் இருந்து சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட 35 பேர் கொண்ட குழுவினர், அயோத்தி சென்று தங்கி உணவு தயாரித்து வழங்கினர்.
தினசரி காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபுள் பிரியாணி, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா உள்ளிட்ட உணவுகளை தயாரித்து வழங்கினர். நேற்று 33வது நாளாக உணவு வழங்கி, நிறைவு செய்தனர்.
தொடர்ச்சியாக அன்னதான சேவை செய்தவர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்ச்சி அயோத்தியில் நடந்தது.
சென்னை கார்த்திக் டிபன் சென்டர் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், அயோத்தி ஆரிய வைசிய சாரிட்டபிள் பவுண்டேஷன் மற்றும் எஸ்.வி.ஏ.சி., பவுண்டேஷன் ரவிக்குமார், தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா துணை தலைவர் ஹரிராம் பிரசாத் ஆகியோர் பங்கேற்று, அன்னதான சேவை செய்தவர்களை கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் அன்னதான நன்கொடையாளர்களும் பங்கேற்றனர்.

