/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி கட்டிய 4 லட்சம் வீடுகளுக்கு அங்கீகாரம்: அரசுக்கு ரூ. 300 கோடி வருவாய் கிடைக்கும்
/
அனுமதியின்றி கட்டிய 4 லட்சம் வீடுகளுக்கு அங்கீகாரம்: அரசுக்கு ரூ. 300 கோடி வருவாய் கிடைக்கும்
அனுமதியின்றி கட்டிய 4 லட்சம் வீடுகளுக்கு அங்கீகாரம்: அரசுக்கு ரூ. 300 கோடி வருவாய் கிடைக்கும்
அனுமதியின்றி கட்டிய 4 லட்சம் வீடுகளுக்கு அங்கீகாரம்: அரசுக்கு ரூ. 300 கோடி வருவாய் கிடைக்கும்
ADDED : ஏப் 28, 2025 04:31 AM

புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் பிளாட்டுகள் போடுவதற்கு கடந்த 2017ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்து கடிவாளம் போடப்பட்டது. இதன் மூலம் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறுவது கட்டுப்படுத்தப்பட்டது.
அதேபோல், அங்கீகாரம் இல்லாத பிளாட்டுகளுக்கு ஒருமுறை வரைமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆனால், புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத மனைகளை காட்டிலும், வீதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகளே அதிகம்.மனை நம்முடையாதாக இருந்தாலும் வீடுகளை கட்டுவதாக இருந்தால் பி.பி.ஏ., எனப்படும் புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்திடம் முழு கட்டடட வரைப்படத்தையும் சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.
நகர அமைப்பு குழுமம் ஒப்புதல் பெற்றே பிறகு வீடுகள் கட்ட வேண்டும். ஆனால் பலரும் எப்போது பி.பி.ஏ.,அனுமதி கிடைப்பது; நாம் எப்போது நாம் வீடு கட்டுவது என்ற முடிவு வந்து விடுகின்றனர்.எனவே பி.பி.ஏ., ஒப்புதல் பெற்று கட்டுவதில்லை. அப்படியே ஒப்புதல் பெற்றாலும் வீதி மீறல்களிலும் ஈடுபடுகின்றனர். முதல் தளம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 3 தளம் வரை கட்டி விடுகின்றனர். இதுவும் விதிமுறை மீறல் தான்.
இப்படி அங்கீகாரம் இன்றி கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பெருகி வந்த சூழ்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். வீடுகள் மீது வங்கிகளில் அவசரத்திற்கு கடன் வாங்க முடியாமல் திண்டாடி வந்தனர்.இந்த அங்கீகாரம் இல்லாத வீடுகளை வரைமுறைப்படுத்த அரசு தனியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மவுனமாகவே இருந்து வந்தது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்துள்ள அரசு அங்கீகாரம் இல்லாத வீடுகளை ஒருமுறை திட்டத்தின் கீழ் வரைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கோப்பு பணிகளில் புதுச்சேரி நகர அமைப்பு குழுமம் மூழ்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கிடைத்ததும் அங்கீகாரம் இல்லாத வீடுகளை வரைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிமுறைகள், விதிமுறைகளை அரசு வெளியிட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை அனுமதி இல்லாமல் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை வரைமுறைப்படுத்தி பி.பி.ஏ., அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 4 லட்சம் வீடுகள் வரைமுறைப்படுத்தப்படும்.
அங்கீகாரம் இல்லாத மனைகள்:அடுத்து ஒருமுறை திட்டத்தின் கீழ் அங்கீகாரம் இல்லாத பிளாட்டுகளை மற்றொரு வாய்ப்பு கொடுத்து வரைமுறைப்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு கட்டுவது அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
விதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை. மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.இதன் மூலம் அவர்களது நீண்ட நாள் பிரச்னையும் தீர்க்கப்பட உள்ளது. இந்த இரு திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.