ADDED : ஆக 12, 2025 02:53 AM

திருபுவனை: திருவாண்டார்கோவில் கிளை நுாலகத்தின் சார்பில் நுாலக தந்தை சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திறனறிவு போட்டி நேற்று நடந்தது.
இப்போட்டியில் திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 48 பேர் கலந்துகொண்டனர்.
நுாலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிளை நுாலக பொறுப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
நுாலகத்தில் 37 வருட வாசகர்களான ராஜாசரவணன், சிவராமன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்கள் போட்டியை முன்னின்று நடத்தினர்.
நிகழ்ச்சியில் உதவி நுாலகர் கவிதா வீரசாமி, நுாலக உறுப்பினர்கள், ராஜசேகர், செல்வம் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு நுாலக உறுப்பினர்கள் ராஜசேகர், செல்வம் ஆகியோர் குடிநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினர்.